நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கும்பல் கொலை, பசு பாதுகாவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புது டெல்லி:

கும்பல் கொலை, பசுக் காவலர்கள் எனக் கூறிவன்முறை சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், இதுதொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாநிலங்கள் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரரின் வழக்குரைஞர் நிஜாம் பாஷா ஆஜராகி, மத்திய பிரதேசத்தில் பசுக் காவலர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாமல் இறைச்சிக்காக மாட்டை வெட்டிய நபர்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஹரியாணாவிலும் இதுபோன்று தாக்குதலுக்கு உள்ளான மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளன. கும்பல் கொலை, பசுப்பாதுகாவலர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018இல்  ஆண்டில் அளித்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றார்.

அப்போது நீதிபதிகள், லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட இறைச்சி பசுவுடையதா என ஆய்வு செய்யாமல் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது மத்திய பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஏன் அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

யாரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்களா? என்று, மத்திய பிரதேச அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த சம்பவங்கல் தொடர்பாக மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset