நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரங்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாப்பாராயுடு

பத்தாங்காலி:

நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரங்களை கோல குபு பாரு தொகுதி இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மக்கள் பயன்பெறும் நோக்கில் பல திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்களால் மாநில இந்தியர்கள் முழுமையாக பயன்பெற்று வருகின்றனர்.ஒ

இந்நிலையில் ஒரு சில தரப்பினர் வரும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்கின்றனர்.

அப்படி பிரச்சாரம் செய்பவர்களும் இங்கிருந்து சென்றவர்கள்.

ஆகவே அவர்களின் பிரச்சாரங்களை கோல குபு பாரு இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் கிராமத் தலைவர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்களான எங்களை சந்தியுங்கள்.

அப்படி பிரச்சினை தீரவில்லை என்றால் பிரதமரை சந்திப்போம்.

அதை விடுத்து நம்பிக்கை கூட்டணியை புறக்கணிப்போம் என்பது எல்லாம் தேவையற்ற ஒன்று.

சிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர் ராஜேஸ், பண்டார் உத்தாமா சிலம்ப கிளப்பின் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகபை, வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு பத்தாங்காலியில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய பாப்பாராயுடு மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர்களான ஸ்ரீகாந்த், புவனேஸ்வரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset