நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் கூடுதல் உத்தரவை அரசாங்கம் ஏன் மறைக்கிறது?: வழக்கறிஞர் ஷாபி கேள்வி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் வீட்டுக் காவலில் தண்டனையை கழிக்க அனுமதித்த மாமன்னரின் கூடுதல் உத்தரவை அரசாங்கம் ஏன் மறைக்கிறது.

இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் உரிய விளக்கத்தை தர வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ   ஷாபி அப்துல்லா கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ   அன்வார் இப்ராஹிம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது.

ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரத்தை  யாராலும் மறைக்க முடியாது. இது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இவ்வாறு கூறினார்.

மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, நீதித்துறை மறுஆய்வு வழக்கின்  விசாரணையில் ஷாபி கலந்துக் கொண்டார்.

இந்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க ஜூன் 5 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது என்று ஷாபி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset