நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது

மும்பை: 

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு வாசலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இருவரை குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் துப்பக்கி சூடு சம்பவத்துக்கான திட்டம் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உள்ளூர் ஆட்களை வைத்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி திகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பஞ்சாபைச் சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால், நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, என்ஐஏ எச்சரித்தது. இதனால் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ராவில், சல்மான் கானின் வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு தாதாவான ரோஹித் கேடாரா என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தான், நம்பகமான ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சல்மான் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தியதாக பிகாரைச் சேர்ந்த விக்கி சாஹிப் குப்தா, சாகர் பால் என்ற இருவரையும் குஜராத்தில் மும்பை போலீஸார் கைது செய்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset