நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து

புது டெல்லி:

1984-இல் தனது தாயார் இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு, அவரது பாதியளவு சொத்துகள் அரசுக்கு சென்றுவிடாமல் தடுக்கவே சொத்து வாரிசுரிமை வரியை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒழித்தார்  என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பெற்றோர் காலத்துக்குப் பிறகு அவர்களிடமிருந்து வாரிசுதார ருக்கு கிடைக்கும் அசையும், அசையா சொத்துகள் மீது வரிவிதிக் கும் இந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து, இதை ரத்து செய்ததே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என பதிலளித்தது.

இதற்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்த காலகட்டத்தில், நாட்டில் சொத்து வாரிசுரிமை வரி அமலில் இருந்தது. அதனால், பரம்பரை சொத்துகளில் பாதியளவு அரசுக்குச் சென்றுவிடும்.

இந்திரா தனது சொத்துகளை ராஜீவ் காந்தி பெயரில் உயில் எழுதிவைத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அந்த சொத்துகள் அரசுக்கு சென்றுவிடாமல் தடுக்கவே, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சொத்து வாரிசுரிமை வரியை ஒழித்தார். இப்போது மீண்டும் அந்த வரியை அமலாக்க விரும்புகின்றனர் என்றார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset