நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சொத்துகளை அறிவிக்க உத்தரவிடப்பட்டதா?: துன் மகாதீர் கேள்வி

கோலாலம்பூர்:

பிரதமர் அன்வாரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சொத்துகளை அறிவிக்க உத்தரவிடப்பட்டதா என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது கேள்வி எழுப்பினார்.

துன் மகாதீர் தனது சொத்து மீதான விசாரணை குறித்து எம்ஏசிசியின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார்.

தற்போதைய பிரதமரான அன்வார் இப்ராஹிம், அவரது குடும்பத்தினர் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு எம்ஏசிசி உத்தரவிட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எம்ஏசிசி தற்போது மகாதீரின் இரு மகன்களான மொக்ஸானி, மிர்சான் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்கக் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இருப்பினும் ஊழல் விசாரணையின் உண்மையான இலக்கு மகாதீர் என்று இரு மகன்களும்  கூறினர்.

இந்தக் கூற்றை எம்ஏசிசி உறுதிப்படுத்தவில்லை.

அதிகார துஷ்பிரயோகத்தை உள்ளடக்கிய எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் தாமும் குற்றம் செய்ததாக மிர்சானுக்கு எம்ஏசிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எனக்குத் தெரிந்தவரை நான் ஒருபோதும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 

ஆனால் எம்ஏசிசி நோட்டீஸில் நான் தவறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் கூறினார்.

கடந்த ஆண்டு என்னிடம் பில்லியன் கணக்கான ரிங்கிட் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அன்வார் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததாக மகாதீர் கூறினார்.

ஆனால் என்னிடம் பில்லியன் கணக்கான ரிங்கிட் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை அன்வாரால் இதுவரை காட்ட முடியவில்லை.

இதன் பொருள் இது வரை நான் குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை.

எம்ஏசிசியிடம் ஆதாரம் இருந்தால் அதை காட்டுங்கள் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset