நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்

கோலாலம்பூர்:

நாட்டின் பள்ளிக் கல்வி முறையைத் தொடும் உலக வங்கி அறிக்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

இன்று மேரு இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று பள்ளிப் பிரச்சனை பற்றி மட்டும் விவாதிப்போம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை 'வளைக்கும் மூங்கில் தளிர்கள்: அடித்தளத் திறன்களை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில் மலேசிய மாணவர்களின் கற்றல் வியட்நாமிய மாணவர்களைக் காட்டிலும் பின்தங்கியிருப்பதைக் காட்டுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பெரும் செலவினம் இதுவாகும்.

மலேசியாவில் உள்ள மாணவர்களில் 58 சதவீதம் பேர் மட்டுமே 5-ஆம் ஆண்டு முடிவதற்குள் படிப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது சக மாணவர்களை விட மிகவும் மோசமாக இருப்பதாகவும்  அந்த அறிக்கை கூறியது.

மலேசிய மாணவர்கள் சராசரியாக 12.5 வருடங்கள் பள்ளியில் செலவிடுவதாகவும் ஆனால் கற்றல் என்பது 8.9 வருடங்கள் மட்டுமே.

வியட்நாமிய மாணவர்கள்  10.7 ஆண்டுகள் கற்றல் பெற்றுள்ளனர் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset