நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு வரவேற்கப்படுகின்றது: பொது சேவை துறை

கோலாலம்பூர்: 

அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை பொது சேவைத் துறை வரவேற்கிறது.

இந்தத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று பொது சேவைத் துறை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 

எனவே, குடும்பப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள வருமான விகிதத்தை அதிகரிப்பதில் பிரதமரின் நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

முன்னதாக, வருகின்ற மே 1-ஆம் தேதி  தொழிலாளர் தினத்தன்று அரசு ஊழியர்களின் அடிப்படை வருமான விகிதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட மற்ற திட்டங்கள் குறித்து அன்வார் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நாட்டில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை அதிகரிப்பதற்கான பொது சேவை ஊதிய முறை ஆய்வு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதை அன்வார் உறுதிப்படுத்தினார்.

10 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பொது சேவை ஊதிய முறையை அறிவிக்க முயற்சிப்பதாகப் பிரதமர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset