நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது

ஷா ஆலம்: 

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக நம்பப்படும் காதலர் ஜோடியைக் காவல்துறையினர் நேற்று செர்டாங், பூச்சோங் ஜெயா பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்தனர். 

இச்சோதனை நடவடிக்கையின் மூலம் 4.73 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 35 கிலோ கிராம் பல்வேறு போதைப்பொருள்களும், 32 தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார். 

அதிகாலை 3.15 மணிக்கு நடந்த சோதனையில், 32 மற்றும் 35 வயதான காதலர் ஜோடி அடுக்குமாடி குடியிறுப்பின் வரவேற்பு பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபருக்குச் சொந்தமான காரில் 26,500 கிராம் எடையுள்ள எம்டிஎம்ஏ ரக போதைப் பொருள்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருள்களும் 4.73 மில்லியன் வெள்ளி மதிக்கத்தக்கது என்று அவர்  காவ் கோக் சின் குறிப்பிட்டார். 

15 தோட்டாக்கள் மற்றும் 17 தோட்டாக்கள் அடங்கிய மகசீன், போதைப்பொருள் தயாரிக்கும் கருவியாகக் கருதப்படும் பஞ்ச் இயந்திரம் ஆகியவற்றுடன் க்ளோக் ரக துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய ஆண் சிண்டிகேட் தலைவன் என்பதும், அவனது காதலி போதை பொருளை விநியோகம் செய்வதற்கு உதவுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்கள் எங்கிருந்து பொருட்களைப் பெற்றனர் என்பது குறித்து இன்னும் தனது தரப்பு விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இரண்டு சந்தேக நபர்களும் நான்கு முதல் 16 முந்தைய பதிவுகள் மற்றும் சிறுநீர் ஸ்கிரீனிங் சோதனைகளில் ஆம்பெடமைன், மெத்தம்பேட்டமைன் மற்றும் பென்சோ ஆகியவற்றுக்கு நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

அவர்கள் இப்போது வெள்ளிக்கிழமை வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset