நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு

கிள்ளான்:

இந்த ஆண்டு தியாகத் திருநாளை முன்னிட்டு  கால்நடைகள் கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு விவாசயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது கால்நடைகளின் விலை வீழ்ச்சிக்கு காரணமான ஆடு மற்றும் மாடு கடத்தலை எதிர்க்கவும் உள்ளூர் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடத்தல் ஆடுகளின் விலை ஒவ்வொன்றும் RM280 மற்றும் RM300 ஆக குறைந்துள்ளது.

விவசாயிகள் குறைந்த பட்சம் உணவின் விலை மற்றும் அனைத்து செயல்முறைகளின் அடிப்படையிலும் விற்க வேண்டும்.

ஒவ்வொரு ஆடும் குறைந்தபட்சம் RM600 வெள்ளியிலிருந்து 1,000 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். 

நோய் தாக்கிய ஆடு, மாடு விற்பனையைத் தடுக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வரும் கால்நடைகளையும் கட்டுப்படுத்துவது முக்கியமாகும்.

இதற்கிடையில், ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset