நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாயில் 2ஆவது முறையாக வெள்ளம்: பரிதவிக்கும் மக்கள்

சுங்கைப்பூலோ:

கனமழையை தொடர்ந்து சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாய் குடியிருப்பில்  வெள்ளம் ஏற்பட்டது.

அப்பகுதியில் இவ்வாண்டு ஏற்பட்ட இரண்டாவது வெள்ளப் பெருக்கு இதுவாகும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினார்.

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழையை தொடர்ந்து சுங்கைபூலோவின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாயில் மீண்டும் வெள்ளம் ஏறியது.

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கு இக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறிய ஆறு உள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அந்த ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் அக்குடியிருப்பில் அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. கடந்தாண்டு மூன்று முறை இங்கு வெள்ளம் ஏறியது.

இவ்வாண்டு கடந்த மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று இங்கு வெள்ளம் ஏறியது.

கடந்த முறை கால் முட்டிக்கு கீழ் தண்ணீர் ஏறியது. ஆனால் இம்முறை குளிர்சாதன பெட்டியே மிதக்கும் வரை வெள்ள நீர் ஏறியது.

இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset