நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

சிப்பாங்: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வருகை நுழைவாயிலில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ 11 பேரிடம் காவல்துறயினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வாக்குமூலம் அளித்தவர்களில் சுடப்பட்ட மெய்க்காப்பாளர், சந்தேக நபரின் மனைவி, விமான நிலையத்தின் பாதுகாப்புக் காவலர்கள், காவல்துறையினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அடங்குவர் எனச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

வணிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பல நபர்களை வாக்குமூலம் பெற அழைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இல்லை என்றும் சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி மூலம் சந்தேகநபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுசைன் கூறினார்.

இந்நிலையில் கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டதைத் தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset