நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவு தொடர்பாக 36 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

ஜொகூர் பாரு: 

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவிற்கு எதிராக ஜொகூர் காவல்துறைக்கு 36 புகார் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

பல தரப்பினரால் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, மேலதிக நடவடிக்கைக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

தேசத் நிந்தனை சட்டம் 1948-இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எம்.குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாசிர் கூடாங் அம்னோ இளைஞர் பிரிவு சுல்தான் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான மற்றும் அரசை அவமதிக்கும் வகையில் அவதூறான பதிவைப் பதிவேற்றியதாக முகநூல் கணக்கு வைத்திருப்பவர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14-ஆம் தேதி ஹெஸ்ரி யாசின் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட அவதூறான பதிவு தொடர்பாக செரி ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset