
செய்திகள் மலேசியா
நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை: மாட் சாபு
கோலாலம்பூர்:
இந்நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் சில தரப்பினர் விசாரித்ததைத் தொடர்ந்து இன்று தனது முகநூல் பக்கத்தில் மாட் சாபு அதற்கான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
நெல், அரிசிகளைத் தங்களுக்குள் சுயாதீனமாக விலைகளை நிர்ணயித்துக் கொண்டு சந்தையில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காத பிரிவினர் குறித்து மலேசிய போட்டி ஆணையத்திற்கு எந்தத் தகவலையும் தனது அமைச்சகம் தயாராக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் விசாரணையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தலையிடாது என்றும் அவர் கூறினார்.
நம் நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களைக் கண்டறிவதை மலேசிய போட்டி ஆணையம் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm