நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா நிதி பெறும் நிறுவனங்கள், இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்: பிரபாகரன்

கோலாலம்பூர்: 

மித்ரா நிதி பெறும் நிறுவனங்கள், இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவருமான பிரபாகரன் கூறினார்.

கடந்தாண்டு மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிதியைப் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இயக்கங்களும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஒதுக்கப்பட்ட நிதி மக்களை முறையாக சென்றடைய வேண்டும். இதை இலக்காக கொண்டு மித்ரா செயல்பட்டு வருகின்றது.

அதே வேளையில், கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.

அக்கணினிகள் பயன்படுத்தப்பட்டவை என்பது முன்கூட்டியே பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்படி பிரச்சனை வந்தால் அந்த மடிக்கணினிகளை மாற்றி கொடுக்க வேண்டிய கடப்பாடு மித்ராவுக்கு உள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தை அமர்ந்து பேசினால் உரிய தீர்வை காணலாம் என்று பிரபாகரன் கூறினார்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ராயர், யுனேஸ்வரன், செனட்டர் டத்தோ நெல்சன், சண்முகம் ஆகியோருடன் இந்தக் கூட்டம் நடைபெறும்.

மித்ராவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், துணைக் குழுக்கள் அமைப்பது, நிதியை எவ்வாறு பயன்படுத்துவது உட்பட பல விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின் மித்ராவை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset