நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இருந்து திரும்ப பெற நெருக்குதல்: சுயேட்சை வேட்பாளர் குற்றச்சாட்டு 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இருந்து போட்டியிடுவதைத் தவிர்க்கவும் போட்டியை திரும்ப பெறவும் அடையாளம் தெரியாத நபர்களால் தாம் மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாவதாக சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேடை வேட்பாளராக போட்டியிடும் யாவ் கெ ஷின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாம் கண்டிப்பாக தோல்வி அடைய வேண்டும் எனவும் போட்டியிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தம்மிடம் இவ்வாறு தெரிவித்ததாக அவர் கூறினார். 

கனிவான முறையில் தமக்கு இந்த மாதிரியான அறிவுரைகளை வழங்கி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நெருக்குதல் அளித்து வருகின்றனர். 

மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கை கூட்டணி சார்பாக PANG SOCK TAU , தேசிய கூட்டணி சார்பாக KAHIRUL AZHARI SAUT , மலேசிய மக்கள் கட்சி சார்பாக HAFIZAH ZAINUDDIN மற்றும் சுயேட்சை வேட்பாளர் NYAU KE XIN ஆகியோர் போட்டியிடுகின்றனர் 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset