நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓப்ஸ் பஜார் ரமலான் மூலம் 165000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: 

உணவுச் சட்டம் 1983-இன் கீழ் நாடு முழுவதும் ரமலான் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பஜார் ரமலான் சோதனை நடவடிக்கையின் போது  வணிகர்களுக்கு எதிராக 1,639 சம்மன்கள் வழங்கப்பட்டன. 

இந்தச் சம்மன்களின் அபராத மதிப்பு 163,900 வெள்ளியாகும். 

உணவு கையாளுதல் பயிற்சி பெறாதது, டைபாய்டு எதிர்ப்பு ஊசி போடாதது, உணவு கையாளுபவர்களின் உடைகள் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்காதது போன்ற பல்வேறு வகையான குற்றங்களைத் தொடர்ந்து உணவுச் சட்டம் 1983 இன் கீழ் வணிகர்களுக்குச் சம்மன்கள் வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், ஏப்ரல் 5-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் ரமலான் சந்தைகளில் விற்கப்படும் உணவுகள் தொடர்பான 29 புகார்கள் கிடைத்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 20 புகார்கள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 புகார்கள் நிலுவையிலுள்ளன.

அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வளாகத்தின் நடத்துநர்களுக்கு உணவு பாதுகாப்பு கல்வி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் மார்ச் 12-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 1,299 ரமலான் சந்தைகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. 

இச்சோதனை நடவடிக்கையின் போது 43,304 கடைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அவற்றில் மூன்று கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset