நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்காண பக்தர்கள் திரண்டனர்

ஈப்போ:

புந்தோங் சுங்கை பாரி  நகராண்மைக் கழக குடியிருப்பில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ  மகா காளியம்மன் ஆலயத்தின் 114ஆம் ஆண்டு திருவிழா சிறப்புடன் நடைபெற்றது.  

இம்மாதம் 5 ஆம் தொடங்கி 7 ஆம் தேதி வரை கொண்டாடபட்ட இவ்விழாவைக் காண நாட்டில் பல் வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த மாதம் முதல் அம்பாளுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றது.

விழாவன்று ஈப்போ பிரியங்கா சாரி செண்டர் நிறுவன உரிமையாளர் எஸ். மோமன், மாநில மஇகா துணகத் தலைவர் எஸ். ஜெயகோபியும்  அன்னதானம் வழங்கினர்.

இவ்விழாவில் பக்தர்கள் பால்  குடம், கரகம், காவடிகள் ஏந்தி காணிக்கை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய  ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவருமான எஸ்.ஜெயகொபி, இங்கு இந்த ஆலயம் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளது.

இந்த ஆலயம் முறையாக செயல் பட்டு வருகிறது. இந்த ஆலய நிர்வாகம் சிறந்த சேவையை வழங்கி வருகிறார்கள். 

இந்த ஆலயத்திற்கு இன்னமும் நிரந்த இடம் கிடைக்க பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதற்கு விரைவில் தீர்வு பிறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset