நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகைகளுக்கு ஆடம்பர வரி விதிக்கக் கூடாது: டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கோரிக்கை

ஈப்போ:

நகை வாங்குவோர்களுக்கு  ஆடம்பர வரி வசுலிக்கும் திட்ட அமலாக்கத்தை அரசாங்கம்  ரத்து செய்ய வேண்டும்.

 பேரா மாநில நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் இந்த  கோரிக்கையை முன் வைத்தார்.

இன்று நகை விலை அதிகரித்து வருவதால், கடைகளில் வாடிக்கையளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவுக் கண்டு வருகிறது.

இதனால் வியாபாரமும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. இந்த நிலையில் நகை வாங்குவோரிடம் வரி வசூலித்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்பத்தியை ஏற்படுத்தும்.

நகை  வாங்குபவர்களில் பெரும் பகுதி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனை அவர்கள் வாங்கி சேமித்து வருகின்றனர்.

பிள்ளைகளின் கல்விக்கு, வீடுகள் வாங்குவதற்கு, குடும்ப தேவைக்கு அந்த நகைகள் உதவியாக உள்ளது.

ஆகவே நாட்டின் பிரதமரும், நிதி அமைச்சருமான் டத்தோஸ்ரீ அன்வார் இப்பராஹிடம் இந்த வரி வசூலிப்பு அமலாக்கத்தை கொண்டு வரக் கூடாது.

ஈப்போ, ஜாலான் எஸ்பியில்  உள்ள சூராவில் வசதி குறைந்தவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பும் உதவிப் பொருட்கள் வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை வலியுறுத்தினார்.

நகை வாங்குவோரிடம் 10 விழுக்காடு வரி வசூலிப்பு விரைவில் அமலாக்கத்திற்கு வர உள்ளது. 

நகை வாங்குவோர்களின் எல்லாம்  நடுத்தர குடும்பத்தினர்கள், அவர்கள் முதலீடு திட்டத்தில் பங்குகொள்ள வில்லை மாறாக எதிர்கால தேவைக்கு நகைகளை வாங்குகிறார்கள்.

இந்த நிலையில் வரி வசூல் அமலாக்கம் செய்தால் நகை வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset