நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வெற்றிப் பரப்புரைக்கான சங்கநாதம், காங்கிரசின் தேர்தல் அறிக்கை; CAA சட்டம் குறித்து குறிப்பிடாதது வருத்தமளிக்கின்றது: ஜவாஹிருல்லாஹ்

சென்னை:

இந்திய திருநாட்டின் விடியலுக்கான பாதையை தேர்தல் அறிக்கை மூலமாக அடித்தளமிட்டு இருக்கிறது காங்கிரஸ் கட்சி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை, 2024 தேர்தலின் திசையை மாற்றி, பாசிச அரசை வீழ்த்தும் ஆயுதமாக அமைத்திருக்கிறது.

சமத்துவம், சமூக நீதி, என்னும் தலைப்பில் குறிப்பிட தக்க அறிவிப்பாக,

சாதிகள், துணை ஜாதிகள் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். என்பதும்,

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது என்ற அறிவிப்பும்,

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு "அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு பாகுபாடின்றி செயல்படுத்தப்படும்" என்ற அறிவிப்பும், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

பாசிச அரசால் கொடுங்கோன்மைக்கு உள்ளான, OBC, SC, ST மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான நிதி, குறிப்பாக உயர்கல்விக்காக இரட்டிப்பாக்கப்படும் என அறிவித்து இருப்பது கூடுதல் சிறப்பு.

மத சிறுபான்மையின மக்கள் நலன், என்ற தலைப்பின் கீழ், 

கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம், சேவைகள், விளையாட்டு, கலை மற்றும் பிற துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து உதவுவோம் என்ற அறிவிப்பும்,

மௌலானா ஆசாத் உதவித்தொகையை மீட்டெடுப்போம் மற்றும் உதவித்தொகைகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்ற அறிவிப்பும் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். 

மேலும்,சிறுபான்மையினருக்கு பாரபட்சமின்றி வங்கிகள் நிறுவன கடன் வழங்குவதை உறுதி செய்வோம் என்ற வாக்குறுதி, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தாலும், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்ற அறிவிப்பு இடம்பெறாதது மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு உரிய பரிகாரத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மூத்த குடிமக்கள் நலன் என்ற தலைப்பின் கீழ், தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு மாதத்திற்கு 200 - 500  லிருந்து இந்த தொகையை மாதம் 1,000 ஆக உயர்த்தும் வாக்குறுதி அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

மருத்துவ நலன் என்ற தலைப்பின் கீழ், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட முன்னோடி திட்டமான 25 லட்சம் வரையிலான ரொக்கமில்லா காப்பீடு நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் என்ற வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, போன்ற தலைப்பின் கீழ்,

25 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு டிப்ளமோதாரர் அல்லது கல்லூரி பட்டதாரிகளுக்கும் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சியை வழங்குவதற்கான புதிய "தொழிற்பயிற்சி உரிமைச் சட்டத்திற்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது" என்ற வாக்குறுதி லட்சகணக்கான இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையாக அமைத்துள்ளது.

மகளிர் நலன்,

"நிபந்தனையற்ற உதவித்தொகை பரிமாற்றமாக ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கும் "மகாலட்சுமி" திட்டத்தை தொடங்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என்ற அறிவிப்பு, வருமான முக்கோணத்தில் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் விளக்கேற்றும் ஒரு உன்னத திட்டம்.

அந்தத் தொகை நேரடியாக வீட்டின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
அவ்வாறு பெண் இல்லாவிட்டால், அது குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் கணக்கிற்கு செலுத்தப்படும் வாக்குறுதி வறுமையை ஒழிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

விவசாயிகள் நலன் என்னும் தலைப்பில், போராடிவரும் விவசாயிகள் கோரிக்கையான சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும்.

சிறு வியாபாரிகளை வஞ்சிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகள் சீர்செய்யப்படும் 

என, அனைத்து தரப்பு மக்களின் நலனை முதன்மையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது மனமகிழ்ச்சியை அளித்துள்ளது.

10 ஆண்டுகால பாசிச கொடுமைகளைச் சுமந்து நிற்கும் குடிகளின் கண்ணீரையும் வேதனைகளையும் போக்கக்கூடிய வகையில்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தயாரிக்க, நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது. மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையதளம், மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். இது காங்கிரஸ் எனப்படும் தனிப்பட்ட கட்சியின் அறிக்கை அல்ல, ஒட்டு மொத்த மக்களின் மனநிலையே ஆகும் என பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset