நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு 

சென்னை:

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்து குறைவால் தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மளிகை பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் பல மளிகை பொருள்கள் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விலை உயா்ந்துள்ளது.

கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மளிகை பொருள்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளது. 

Shops allowed to be open 24 hours a day in Tamil Nadu

இந்த நிலையில், சென்னையில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் கிலோ ரூ. 160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ. 222-க்கும், ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.160- க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

இனிவரும் நாள்களில் பருப்பு வகைகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

 அதேநேரத்தில் சீரகம், சோம்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகிய பொருள்களின் விலை சற்று குறைந்துள்ளது. சமையல் எண்ணெய் விலையில் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லை. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset