நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து  தங்கம் கடத்திய குருவி கைது

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணி ஒருவரை சோதித்த போது, அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது ஆசனவாயில் மூன்று சிறு பாக்கெட்டுகளாக இருந்த 1081 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், அதை உருக்கி 977 கிராம் தங்கக் கட்டியாகக் கைப்பற்றினர்.

இதன் மதிப்பு 70 லட்சத்து 58 ஆயிரம் என வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள், உயிரினங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset