நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஏற்பாட்டில் 'இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்' கருப்பொருளில் தமிழ்மொழி விழா

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகிய அமைப்புகளின் ஆதரவில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை 'இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலை முறையும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்ச்சியை இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பான முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஏழாவது ஆண்டாக ஒருங்கிணைத்தது. 

இளையர்கள் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் நினைவு அங்கமாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பல இந்திய குடும்பங்களில் இருக்கும் சிறுவர்கள் தமிழில் பேசத் தயங்குவதை திருமதி நர்கிஸ் பானு, திருமதி மீனா, மாணவி ஆயிஷா இப்ராஹீம் ஆகியோர் குறு நாடகமாக படைத்தனர். 

அதைத் தொடர்ந்து பேசும் கலை அரங்கம் தொடங்கியது.

மாணவர்களுக்குத் தமிழில் பேச வாய்ப்பு அளிக்கும் நோக்கில் நடைபெற்ற அங்கத்தை முனைவர் மன்னை க. இராஜகோபாலன் வழிநடத்தினார்.

வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இயல் பிரபு, அக்‌ஷிதா சுரேஷ், வர்ஷிகா கண்ணன், இத்ரீஸ் அஹமது ஆகியோர் தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றித் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) தலைவருமான புதிய நிலா மு. ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்த சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் அ. முஹம்மது பிலால் தலைமையுரையாற்றினார். 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு தலைவரும், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பின்னர் சிறப்பு விருந்தினர் உரை ஆற்றினார். 

செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி குமாரி சம்ரிதி முத்து சரவணன் உள்ளூர் சிறப்புப் பேச்சாளர் என்ற முறையில் தமிழ்மொழி கற்றுத்தரும் விழுமியங்கள், அதன் தனித்துவம் மற்றும் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து பேசினார். 

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராகத் தன்முனைப்புப் பேச்சாளர், ஆய்வியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான முனைவர் சுல்தான் ஹலீபா அல் ரஷீத் உரையாற்றினார். வெளிநாட்டில் படித்து பிறகு அங்கு பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தமிழ்மொழி ஒட்டியும் தனது ஆராய்ச்சிகளைப் பற்றியும் உரையாற்றி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.

மாணவர்கள் சம்ரிதி சஞ்சீபன், தயாளகுணதாசன் அனந்தசயன் இனிய குரலில் பாடினர். திருவாளர்கள் ஃபரீஜ் முகம்மது, பேரவைப் பொருளாளர் முஹம்மது அசீம், தமீம் அன்சாரி , கேத்திரபாலன், உமா சங்கர், ஜமால் முஹம்மது, ரெங்கராஜ் , வெண்ணிலா அசோகன், சங்கீதா கந்தசாமி , பொக்கிஷம், இசக்கிச் செல்வி ஆகியோர் அரங்க நிர்வாகத்தைக் சிறப்பாக கவனித்துக் கொண்டனர்.

திருமதி மஹ்ஜபீன், குமாரி யாழினி கமலக்கண்ணன் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தனர். 

நிகழ்ச்சியின் நிறைவாக பேரவையின் பொதுச் செயலாளர் முனைவர் முஹைதீன் நிசார் அன்வர் நன்றியுரை கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset