நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை 

கொழும்பு:

நாகப்பட்டினம் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே 13 ஆம் தேதி முதல் கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அதனை பிறகு நிறுத்தப்பட்டது.

மீண்டும் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் தேதி சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது. 

ஏற்கனவே செரியாபாணி என்ற கப்பல் இயங்கிய நிலையில் வேறொரு கப்பல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

நாகையில் இருந்து இலங்கைக்கு கட்டணமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து சேவையை சரியாக இயக்கமுடியாத நிலை உருவானது. குறைவான பயணிகளை மட்டுமே கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட புயல், கடும் மழை காரணமாக போக்குரவத்து பாதிக்கப்பட்டது.

மழையை காரணம் காட்டி கப்பல் போக்குவரத்து சுமார் 6 மாத காலம் நிறுத்தப்பட்டது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset