நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டில் வேலைவாய்ப்பு மோசடிக் குற்றங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும்

கோலாலம்பூர்:

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது வலியுறுத்தப்படும் 10 முக்கியக் கூறுகளில் வேலைவாய்ப்பு மோசடி குற்றமும்  இடம்பெறும்.

வேலைவாய்ப்பு மோசடிக் குற்றங்கள்  உலகலாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால் இவ்விவகாரத்தை முக்கியக் கூறாக இந்த மாநாட்டில் கொண்டு வர மலேசியா முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அடுத்தாண்டு மலேசியா தலைமை தாங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இந்தத் தலைப்பை சேர்ப்பதில் மிகவும் முன்னோக்கிச் சிந்திக்கும் ஆசியான் நாடாக மலேசியா திகழ்கிறது. 

இந்த மாநாட்டில் இடம்பெற்ற  10 முதன்மை கூறுகளில் ஒன்றாக வேலைவாய்ப்பு மோசடி என்ற தலைப்பைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததாக அவர் கூறினார். 

வேலைவாய்ப்பு  மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர் மோசடி பிரச்சனையை மிகவும்  திறம்பட கையாள்வதற்கான அரசாங்கத்தின் செயல் திட்டம் குறித்து  செனட்டர் ரீட்டா சரிமா அனாக் பெட்ரிக் இன்சோல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த  2021-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை 470 நபர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 362 புகார்கள் பெறப்பட்டுள்ளது காவல்துறையின் தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட 470 பேரில் 331 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 139 பேர் இன்னும் சம்பந்தப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிப்பதாக வகைப்படுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset