நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் வீட்டுக் காவலுக்கு ஏப்ரல் மாதம் விசாரணை

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டுக்காவலில் தண்டனையை அனுபவிக்க அனுமதித்து முன்னாள் மாமன்னர் பிறப்பித்த துணை உத்தரவை  வழங்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க அவர் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

நஜீப்பின் இம்முயற்சியை ஏப்ரல் 17 ஆம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நஜீப் தனது விண்ணப்பத்தை ஆதரிப்பதற்காக கூடுதல் பிரமாணப் பத்திரத்தைப் பெற விரும்புவதாக நீதிபதி அமர்ஜித் சிங்கிடம் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாஹ் தெரிவித்தார்.

எனினும், பிரமாணப் பத்திரத்தின் உறுதிமொழியாளர் மலேசியாவில் இல்லை.

நோன்பு பெருநாளுக்கு பிறகுதான் திரும்புவார் என்றும் அவர் கூறினார்.

மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அஹ்மத் ஹனிர் ஹம்பலி, வழக்கறிஞர்கள் பிரமாணப் பத்திரத்தை விசாரணை தேதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக முன்னாள் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாஹ் தனது ஆட்சி முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 29 அன்று  மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் போது துணை ஆணையை பிறப்பித்ததாக நஜீப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset