நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது

கோலாலம்பூர் -
மலேசியர்களுக்கு 25,000 இலவச திறன் பயிற்சிகளை எச்ஆர்டி கோர்ப் வழங்க முன்வந்துள்ளது.

எச்ஆர்டி கோர்ப்பின் திட்ட அதிகாரி சோஃபியன் அமீன் இதனை தெரிவித்தார்.

வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை எச்ஆர்டி கோர்ப்பின் தேசிய பயிற்சி வாரம் நடைபெறவுள்ளது.

இக்காலக்கட்டத்தில் 25 ஆயிரம் திறன் பயிற்சிகளை மலேசியர்களுக்கு இலவசமாக வழங்க எச்ஆர்டி கோர்ப் இலக்கு கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சின் கீழ் நடத்தப்படும் இப்பயிற்சியில் கடந்த ஆண்டு வெளியான வெற்றியைத் தொடர்ந்து 200,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பயனடைய உள்ளதாக அவர் கூறினார்.

அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் பயிற்சி வழங்குநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் திறன் தொகுப்புகளில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம், திறன் மேலாண்மை உட்பட பல பயிற்சிகள் இதில் அடங்கும்.

எச்ஆர்டி கோர்ப் அதன் ஆதரவாளர்களுடன் அதே காலகட்டத்தில் நாடு முழுவதும் தேசிய பயிற்சி வாரத்துடன் இணைந்து 500 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.

எச்ஆர்டி கோர்ப்பின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset