நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரா ஒலிம்பிக்கில் மலேசியாவுக்கு முதல் தங்கத்தை பேட்மிண்டன் மூலம் சியா வென்றார்

கோலாலம்பூர்: 

மலேசியாவின் ச்சியா லீக் ஹூவின் கனவு நனவாகியது. இன்று பாரா ஒலிம்பிக்கில் அவருக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

டோக்கியோவில் உள்ள யோயோகி தேசிய விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 50 நிமிட ஆடவர் ஒற்றையர் (SU5) இறுதிப் போட்டியில், இந்தோனேசியாவின் தேவா அன்ரிமுஸ்தியை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் அவர் தோற்கடித்தார். 

இந்த வெற்றியின் மூலம் லீக் ஹோ நாட்டிற்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளார். 50 நிமிடத்தில் இந்த வெற்றியை ச்சியா ஈட்டினார்

உலகப் பட்டங்கள் மற்றும் பாராலிம்பிக்ஸ் தங்கம் தவிர, லீக் ஹூ ஆசிய பாரா விளையாட்டு, ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset