நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாகாவிற்கு பதிலாக பிஎஸ்ஜி ஆட்டக்காரரை கடன் வாங்க அர்செனல் அணி இலக்கு

லண்டன்:

புகாயோ சாகாவிற்கு பதிலாக பிஎஸ்ஜி ஆட்டக்காரரை கடன் வாங்க அர்செனல் அணி இலக்கு கொண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிறிஸ்டல் பேலஸ் அணியுடனான ஆட்டத்தின் போது சாகா காயமடைந்தார்.

இதனால் அவர் 24 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் விளையாடினார்.

இக்காயத்தினால் அவர் கிட்டத்தட்ட மார்ச் மாதம் வரை ஓய்வில் இருப்பார் என அர்செனல் அணி நிர்வாகி மைக்கல் அர்தேதா கூறியுள்ளார்.

அர்செனல் கிளப் ஏற்கெனவே காயம் காரணமாக பல ஆட்டங்களில் கேப்டன் மார்ட்டின் ஒடேகார்ட் தவறவிட்டதைக் கண்டுள்ளது.

இதன் அடிப்படையில் அர்செனல் அணி, பிஎஸ்ஜி அணியின் ஆட்டக்காரர் ரான்டோல் கோலோவை கடனுக்கு வாங்க இலக்கு கொண்டுள்ளது.

இந்த சீசன் முடியும் வரை அவர் அர்செனல் கிளப்புக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset