நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அடுத்த ஆண்டில் இன்னும் பல பட்டங்களை வெல்லத் தயாராக உள்ளேன்: அரினா சபலென்கா

பிரிஸ்பென்:

அடுத்த ஆண்டில் இன்னும் பல பட்டங்களை வெல்லத் தயாராக உள்ளேன் என்று உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அரினா சபலென்கா கூறினார். 

மூன்றவது முறையாக ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் பட்டத்தை வெல்லும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக 
அவர் தெரிவித்தார்.

26 வயதான அவர் ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் இறுதிப் போட்டியில் சினாவின்  ஜெங் கின்வெனை தோற்கடித்து தனது 
ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் போட்டியில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று முறை பட்டத்தை வென்ற  முதல் பெண்மணியாக மார்டினா ஹிங்கிஸு திகழ்கின்றார். 

ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் போட்டியில் மூன்றாவது முறையாக சபலென்கா பட்டதை வென்றால் தொடர்ச்சியாக மூன்று முறை பட்டத்தை இரண்டாவது பெண்மனியாக அவர் திகழ்வார். 

தனக்கு மேலும் பயிற்சி வேண்டும் என்றும் வெற்றி அடைய அதற்கான முயற்சிகளை எடுத்து நிச்சயம் பட்டத்தை வெல்லுவேன் என்று அவர் உறுதி பூண்டுள்ளார். 

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset