நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய காற்பந்து சங்கத்தின் தேசியத் துணைத்தலைவர் பதவிக்குப் ஃபிர்தாவுஸ் போட்டி 

கோலாலம்பூர்: 

மலேசிய காற்பந்து சங்கத்தின் தேசியத் துணைத்தலைவர் பதவிக்குப் நடப்பு உதவி தலைவராக இருக்கும் முஹம்மத் ஃபிர்டாவுஸ் முஹம்மத் போட்டியிடுகிறார் 

எதிர்வரும் பிப்ரவரி 15ஆம் தேதி எஃப் ஏ எம் சங்கத்தின் தேசிய காங்கிரஸ் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அவர் தன்னார்வ அடிப்படையில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார் 

நாட்டின் காற்பந்து துறையை மேலும் வலுவூட்டவும் மேபடுத்தப்படும் இரண்டாம் நிலைக்குத் தாம் போட்டியிடுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த 2018-2021ஆம் ஆண்டு வரை எஃப் ஏ எம் தலைமை செயற்குழு நிர்வாகியாக இருந்த அவர் 2021ஆம் ஆண்டு முதல் உதவி தலைவராக பதவி வகித்து வருகிறார் 

ஃபிர்தாவுஸ் சிலாங்கூர் யுனைடெட் அணியின் முன்னாள் விளையாட்டாளர், பயிற்றுநராவார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset