நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதிக் குறைந்தவர்களின் சுமையை குறைப்பதே ஏசான் குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்

போர்ட்டிக்சன்:

வசதிக் குறைந்தவர்களின் சுமையை குறைப்பதே ஏசான் குழுமத்தின் முதன்மை இலக்கு.

இதன் அடிப்படையில் தான் அன்பளிப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்று அதன் நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டு நோன்பு பெருநாளை  முன்னிட்டு வசதிக் குறைந்த மக்களுக்கும் அன்பு இல்ல குழந்தைகளுக்கும் பெருநாள் அன்பளிப்புகளை ஏசான் குழுமம் வழங்கி வருகிறது.

இவ்வாண்டு கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டின் 27ஆவது நிகழ்ச்சி போர்ட்டிக்சன் ஏசான் சீவியூ ஹோட்டலில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 300 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதே வேளையில் 500 பேருடன் இணைந்து நோன்பு திறக்கப்பட்டது.

பெருநாள் வரை ஏசான் குழுமத்தின் இந்நிகழ்வுகள் தொடரும் என்று  டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset