நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணை ஓட்டுநர் இல்லாத 12 விரைவு பேருந்துகளுக்கு எதிராக வழக்கு பதிவு 

புக்கிட் மெர்தாஜாம்: 

300 கிலோமீட்டருக்கு மேல் பயணம் அல்லது நான்கு மணிநேரம் தொடர்ந்து செல்லும் பயணங்களுக்குத் துணை ஓட்டுநர் இல்லாத காரணத்திற்காகப் பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 12 விரைவுப் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜுரு டோல் பிளாசா, சுல்தான் அப்துல் ஹாலிம் முவாசம் ஷா பாலம் டோல் பிளாசா ஆகிய இரண்டு இடங்களில் விரைவுப் பேருந்தை குறிவைத்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆறு மணி நேரம் இந்தச் சோதனை நடவடிக்கை நடந்ததாக ஜேபிஜே பினாங்கு ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

சாலை போக்குவரத்து சட்டம் 1987 மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் சாலை பொது போக்குவரத்து சட்டம் 2010 ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்காத ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset