நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3ஆர் விதிகளை மீறும் ஸம்ரி வினோத்தை அரசு கண்டிக்க வேண்டும்; மாமன்னரிடம் மகஜர் வழங்கப்படும்: இந்து சங்கம்

பெட்டாலிங் ஜெயா:

நாட்டின் 3ஆர் விதிகளை மீறும் ஸம்ரி வினோத்தை அரசு உடனடியாக கண்டிக்க வேண்டும்.

இது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மகஜர் வழங்கப்படும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் இதனை வலியுறுத்தினார்.

மலேசிய மக்கள் பாரம்பரியமாக நிலை நாட்டி வரும் சமய சகிப்புத் தன்மையும் சமூக நல்லிணக்கமே ஆகும்.

இதை கெடுக்கும் வகையில் ஸம்ரி வினோத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்து சமயத்தை தொடர்ந்து அவர் பழித்து வருகிறார்.

குறிப்பாக இந்து பெருமக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிவராத்திரி குறிப்பிடத்தக்கது.

தென்னாடு உடைய சிவனார்க்கு உரிய ராத்திரியான இந்த சிவராத்திரியின் மகிமையே பரம் பொருளை முற்றும் முழுதுமாக தொழுது ஒழுகுவது தான்.

இப்படிப்பட்ட சிவராத்திரியைப் பண்டிகையைக் கொண்டாடி முடிந்த பின், இந்து சமய அன்பர்களையும் சிவலிங்கத்தையும் சிறுமைப்படுத்தும் விதமாக, ஸம்ரி வினோத் வெளியிட்ட கருத்திற்கு நாடு முழுவதும் உள்ள இந்து சமயத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

ஸம்ரி வினோத் இந்து சமயத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல. 

இது தொடர்பில் அவர் மீது ஆயிரக்கணக்கான போலீஸ் புகார் செய்யப்பட்டது. வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால் ஸம்ரி வினோத் மீது இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அவர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் சசி முயற்சியில்  வரும் ஏப்ரல் 1ஆம் தேதி தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் மகஜர் ஒன்று வழங்கப்படவுள்ளது.

ஸம்ரி மீது நடுநிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

அதே வேளையில் ஸம்ரி வினோத் உட்பட இந்து சமயத்தை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு மகஜர் வழங்கப்படும்.

ஸம்ரி வினோத் எதிராக நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் திரளாக ஒன்றுக் கூட வேண்டும் என்று தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset