நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை

ஹைதராபாத்:

காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. 

முஸ்லிம் ஐக்கிய முன்னணி (எம்யுஎஃப்) மற்றும் ஆந்திராவின் குண்டூரிலுள்ள முஸ்லிம் ஜேஏசி-யின் தலைவர் முஹம்மது கலீம், காங்கிரஸ் தேசியத் தலைவரும் 'இண்டியா' கூட்டணியின் அமைப்பாளருமான மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பங்கு ஏறக்குறைய 18 சதவீதமாக உள்ளது. 

ஆனால், மக்களவையில் தற்போது 27 முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.
 
இதை உயர்த்தும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி சார்பில் குறைந்தபட்சம் 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இதை நீங்கள் அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சியிலும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset