நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு

புது டெல்லி:

பாஜக சார்பில் போட்டியிட வருண் காந்திக்கு வாய்ப்பு  வழங்கப்படாததால் காங்கிரஸ் கட்சி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திரா காந்தியின் இளைய மகனான மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி.

எம்பியாக இருந்த இருவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மேனகா காந்திக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று முறை பாஜக எம்.பி.யாக இருந்த வருண் காந்திக்கு இந்த முறை அக்கட்சித் தலைமை தொகுதி ஒதுக்கவில்லை.

அண்மைக் காலமாக அவர் பாஜக மத்திய தலைமையை விமர்சித்து வந்தார். பாஜக தலைமைக்கு வருண் காந்தி மீது ஏற்பட்ட அதிருப்தியே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சோனியா-ராகுல் குடும்பத்துடன் வருண் காந்தி நெருக்கம் காட்டுகிறார் என்ற காரணத்தினால்தான் தொகுதி ஒதுக்காமல் அவரை பாஜக புறக்கணித்துள்ளது என்றும் அவர் எங்கள் கட்சியில் இணைந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset