நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

புது டெல்லி:

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின்  தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கைதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நியாயமான, வெளிப்படையான சட்ட செயல்முறையை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாரபட்சமற்ற விசாரணைக்கு ஜெர்மனி வலியுறுத்திய சில தினங்களில் அமெரிக்கா இதை தெரிவித்துள்ளது.

கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த வாரம் கைது செய்தது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை முடக்கவே இந்தக் கைதை பாஜக அரசு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

எனினும், முதல்வர் பதவியில் நீடித்து வரும் கேஜரிவால், சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறபித்து வருகிறார்.

கேஜரிவால் கைது குறித்து ஜெர்மனி கவலை தெரிவித்தது . நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset