நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழிப் பண்ணைக்கு 7 ஏக்கர் நில அங்கீகாரம் தொழில் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: சிவநேசன்

கோப்பெங்:

இந்தியர்கள் தொழில் துறையில் ஈடுபட பேரா மாநில அரசாங்கம் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்ள பல தொழில் துறைகளில் இந்தியர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்

அந்த வகையில் தமது 29ஆவது வயதில் இருந்து கோழிப் பண்ணையை வழி நடத்தி வந்த எஸ் ஜி. சுப்பிரமணியத்திற்கு மாநில அரசு 7 ஏக்கர் நில அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இணங்க பேரா கோப்பெங்கில் உள்ள  கோத்தாபாரு  எனும் இடத்தில் கோழிப் பண்ணையை வழி நடத்தி வரும் 61 வயதான  இவருக்கு பேரா மாநில அரசாங்கம் நிலப்பட்டா அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கோழி பண்ணை தொழில் மற்றத் தொழில்கள் போல் இல்லை. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து சட்டவிதிகளை பின்பற்றினால் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.

கோழிப் பண்ணைத் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தி தொடர்ந்து வெற்றிக்கண்டதின்வழி 7 ஏக்கர் நிலத்திற்கான நிலப்பட்டா வழங்குவதற்கான கடித்தை வழங்கியுள்ளது.

விரையில் அவரிடம் நிலப்பட்டா ஒப்படைக்கப்படும் என்று கோழிப்பண்ணையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset