நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவப்பு அறிக்கை தோல்வி கண்டதால் கணேஸ்பரனின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலீஸ்

புக்கிட் அமான்:

சிவப்பு அறிக்கை தோல்வி கண்டதால் கணேஸ்பரன் நடராஜாவின் கடப்பிதழ் முடக்கப்பட்டது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோஶ்ரீ முஹம்மத் சுஹைலி முஹம்மத் ஜைன் கூறினார்.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வீடியோவை பதிவேற்றிய ஃபேஸ்புக் உரிமையாளரான கணேஸ்பரன் நடராஜாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அவருக்கு எதிரான சிவப்பு அறிவிப்பை வெளியிடுவதில் போலீஸ் தோல்வி கண்டுள்ளது.

இதனால் அவரின் கடப்பிதழை போலீசார் முடக்கியுள்ளனர்.

கடந்த 2020 நவம்பரில் புதுபிக்கப்பட்ட கணேஸ்பரனின் கடப்பிதழை ரத்து செய்யுமாறு  குடிநுழைவுத் துறை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

கணேஷ்பரன் 3ஆர் எனப்படும் ஆட்சியாளர், மதம், அரசியல் குறித்து அவமதிப்பாக பேசுவது ஒன்றும் புதியது அல்ல.

ஏற்கெனவே 2017, 2018ஆம் ஆண்டுகளில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

கடத்த 2018ஆம் ஆண்டு முதல் நேற்று வரை 22 புகார்கள் அவர் மீது பதிவாகியுள்ளது.

மேலும் அந்த ஆடவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று டத்தோஶ்ரீ முஹம்மத் சுஹைலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset