நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூதாகரமாகும் மித்ரா விவகாரம்; துணையமைச்சர் சரஸ்வதி பதவி விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

கோலாலம்பூர்:

மித்ரா விவகாரம் தொடர்பில் அடுத்தடுத்து நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களால் தற்போது அவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் யாரிடமும் ஒத்துப் போகாத துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பதவி விலக வேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருந்தது. சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மித்ரா நடவடிக்கை குழுவுக்கு தலைமையேற்றிருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

அதன் பின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மித்ராவை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.

குறிப்பாக மித்ரா துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கட்டுப்பாட்டிற்குள் மித்ரா வந்தது.

அந்த முதல் நாளிலிருந்து மித்ராவுக்கு தலைவலி ஆரம்பித்தது. மித்ராவின் நிதிகள் இதுவரை சரிவர பயன்படுத்தவில்லை.

மித்ரா நடவடிக்கை குறித்து தலைவராக நியமிக்கப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இது நாள் வரை எந்த ஒரு பணியையும் தொடங்கவில்லை.

அதேவேளையில் மக்களவையிலும் மேலவையிலும் அதன் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திணறி வருகிறார்.

இந்நிலையில் மித்ரா தொடர்பான சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்தது.

இதில் துணையமைச்சர் சரஸ்வதி, முன்னாள் நிர்வாகத்தின் தலைவர் டத்தோ ரமணனின் தலைமைத்துவம் பற்றி அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால்  விவாதங்கள் சர்ச்சையாகி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அறையை விட்டு வெளியேறி உள்ளனர்.

மேலும் ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து யாரிடமும் ஒத்து போகாத சரஸ்வதி கந்தசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதோடு மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset