நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வெளியுறவு அமைச்சர்  மலேசியா வருகை

கோலாலம்பூர்:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று முதல் நாளை வரை இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வருகிறார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தார்.  

பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய  நாடுகளுக்கான இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தில் ஜெய்சங்கருடன் இந்திய அரசின் மூத்த அதிகாரிகளும் வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தது. 

மலேசியாவிலிருக்கும் போது அவர் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹாசனின் விருந்தினராகத் தங்கியிருப்பார்.

மலேசியா-இந்தியா இருதரப்பு விவகாரங்களின் பன்முக பரிமாணங்கள்,  பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துலக பிரச்சனைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது உட்பட இரு அமைச்சர்களும் ஆக்கப்பூர்வமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தினர்.

இரு அமைச்சர்களும் உயர் நிலைத் தலைவர்களின் பயணங்கள் குறித்தும்  மலேசியா-இந்தியா 7-ஆவது கூட்டு ஆணையக் கூட்டத்தைப் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளக்கூடிய தேதியில் கூட்டுவது குறித்தும் விவாதித்தனர் என்று விஸ்மா புத்ரா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

கடந்தாண்டு டிசம்பரில் முஹம்மத் ஹசான் வெளியுறவு அமைச்சராகப்  பதவியேற்ற பிறகு இது அவர்களின் முதல் சந்திப்பு என்று விஸ்மா புத்ரா கூறியது.

ஜெய்சங்கர் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தத்திற்காக சந்திக்கவுள்ளதோடு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோவையும் சந்திக்கவுள்ளார்.

வலுவான பொருளாதார கூட்டாண்மை, நெருங்கிய மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்ட மலேசியாவும் இந்தியாவும் நீண்டகால மற்றும் நிலையான உறவுகளைப் பேணி வருகின்றன என்று அது கூறியது.

இந்தியா மலேசியாவின் 12-ஆவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது. 

கடந்த 2023-ஆம் ஆண்டில் இரு நாடுகளின்  மொத்த வர்த்தகம் 77.76 பில்லியன் வெள்ளியாக இருந்தது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset