நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபாமா உள்ளூர் அரிசி விநியோகத்தை அடுத்த மாதம் உயர்த்துகிறது 

கோலாலம்பூர்:

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூட்டரசு வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் ஃபாமா உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தை மாதத்திற்கு 1,800 மெட்ரிக் டன்னிலிருருந்து 2,500 மெட்ரிக் டன்னாக உயர்த்தவுள்ளது. 

அரிசி விநியோகத்தை மேலும் அதிகரிக்க ஃபாமாவிற்காக சமீபத்தில் நடைபெற்ற தேசிய வாழ்வாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபாமா இயக்குநர் ஜெனரல் அப்துல் ரஷித் பஹ்ரி தெரிவித்தார்.

முன்பு, ஃபாமா ஒவ்வொரு மாதமும் 1,800 மெட்ரிக் டன் 10kg அரிசியை விநியோகித்தது.

அடுத்த மாதம் முதல் ஃபாமா 2500 மெட்ரிக் டன் அரிசியை விவசாய விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யும். 

10 கிலோ அரிசியின் விலை 26.00 வெள்ளியாகவுள்ளது. இது கட்டுப்படுத்தப்பட்ட விலையாகும். 
 
ஜார்ஜ் டவுனில் இன்று மாநில கூட்டுறவு வளர்ச்சி, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஃபஹ்மி ஜைனோல் தலைமையில் நடைபெற்ற அக்ரோஃபீஸ்டா ஐடில்ஃபித்ரி 2024 இன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களில் ஃபாமாவும் ஒன்று.

சம்பந்தப்பட்ட காய்கறி ஏற்றுமதியைத் தொடர்ந்து தடைசெய்யும் இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து வெங்காய விநியோகத்தைத் தனது தரப்பு அதிகரிக்கும் என்று அப்துல் ரஷித் கூறினார்.

நாட்டில் வெங்காய விநியோகத்திற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, காய்கறிகளின் விற்பனை விலை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

நோன்பு பெருநாளுக்கு முன்னதாக கோழி மற்றும் இறைச்சி போன்ற அனைத்து அடிப்படை பொருட்களும் போதுமான அளவில் வழங்கப்படுவதை ஃபாமா எப்போதும் உறுதி செய்கிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset