நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பச்சைக்கொடி காட்டினால் மஇகா உதவித் தலைவருக்கு போட்டியிடுவேன்: டத்தோ நெல்சன்

கோலாலம்பூர்:

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பச்சைக் கொடி காட்டினால் மஇகா உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்.

மஇகாவின் கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கநாதன் கூறினார்.

மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார்.

இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் கட்சி உதவித் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவேனா என்ற கேள்விகள் பரவலாக உள்ளது.

நான் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அணியில் இருக்க ஆசைப்படுகிறேன். 

ஆகவே உதவித் தலைவர் பதிவிக்கு போட்டியிட அவர் பச்சைக்  கொடி காட்டினால் நிச்சயம் நான் போட்டியிடுவேன்.

இந்த விவகாரத்தில் முடிவு தேசியத் தலைவரின் கையில் உள்ளது. அவரின் வழிகாட்டலின் அடிப்படையில் எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

அதே வேளையில் கட்சியின் வெறுமனே பதவிகள் வகிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

மேலும் கட்சி உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நான் கேட்டறிய வேண்டும் என்று டத்தோ நெல்சன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset