நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த 5 ஆண்டுகளில் மஇகா தலைமையகத்தைக் கட்டி முடிப்பேன்; டத்தோஸ்ரீ சரவணன்தான் துணைத் தலைவர்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

அடுத்த 5 ஆண்டுகளில் மஇகாவின் புதிய தலைமையகத்தை கட்டி முடிப்பேன்.

இதுவே எனது அடுத்த இலக்கு என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

2024 - 2027ஆம் ஆண்டுக்கான கட்சியின் தேசியத் தலைவராக 3014 கிளைத் தலைவர்களின் ஆதரவுடன் தேர்வு பெற்றுள்ளேன்.

கட்சியின் தலைவராக என்னை தேர்வு செய்த கட்சிக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும் என்பதுதான் என் எண்ணத்தில் உள்ளது.

குறிப்பாக மஇகாவின் புதிய தலைமையகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் கட்டி முடிப்பேன்.

இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் கட்சி பொருளாதார ரீதியில் யாரையும் நம்பியிருக்க வேண்டியது இல்லை.

இது தான் எனது மிகப் பெரிய இலக்காக உள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

தலைவர் பதவியை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் டத்தோஸ்ரீ சரவணனை தேர்வு செய்ய வேண்டும் என யாரையும் நான் கேட்க போவதில்லை.

ஆனால் எனக்கு துணைத் தலைவராக டத்தோஸ்ரீ சரவணன் தான் வேண்டும். 

ஆகவே இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது உங்கள் கையில் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

கட்சியின் உயர்மட்ட பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இது தான் கட்சியில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset