நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குட்இயர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு 22 நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன: வி.பாப்பாராய்டு 

பெட்டாலிங் ஜெயா: 

ஷா ஆலமிலுள்ள குட்இயர் தொழிற்சாலையில் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க இருபத்து இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு கூறினார்.

தொழிற்சாலை மூடப்படுவதால் வேலை இழக்கும் குட்இயர் ஊழியர்களுக்கு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் புதிய வேலைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வேலையின்மை பிரச்சனையைக் கையாளும் நடவடிக்கையாக வேலையை இழக்கும் தொழிலாளர்களுக்கு 22 நிறுவனங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றார் அவர். 

சிலாங்கூர் தொழிலாளர் அதிகாரமளிக்கும் பிரிவின் பிரதிநிதியும் சிலாங்கூர் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநருமான இஸ்மாயில் அபி ஹாஷிமும் குட்இயர் நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.

முன்னதாக, மார்ச் 7-ஆம் தேதி குட்இயர் நிறுவனம் ஷா ஆலமிலுள்ள அதன் தொழிற்சாலை ஜூன் 30-ஆம் தேதி அன்று மூடப்படும் என்று அறிவித்தது.

பெர்கேசோ சிலாங்கூர் ஏற்கனவே 550 குட்இயர் ஊழியர்களுக்கு MyFutureJobs மற்றும் Insured Persons உதவிகளை வழங்கியுள்ளது.

அங்கு அவர்கள் பொருத்தமான வேலை காலியிடங்களுடன் பொருத்தப்படுவார்கள் என்று பாப்பாராய்டு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset