நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு குழந்தை பராமரிப்பு மையப் பணியாளர்கள் குற்றப் பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: நான்சி சுக்ரி

கோலாலம்பூர்: 

சமூக நலத்துறை அனைத்து அரசு குழந்தை பராமரிப்பு நிலைய ஊழியர்களுக்கும் எந்தக் குற்ற வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்ய அவர்களைப் பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு குழந்தை பராமரிப்பு மையங்களிலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் தரப்பு காவல்துறையுடன் இணைந்து அனைத்து ஊழியர்களைச் சோதனைக்கு உட்படுத்தும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார். 

அரசு குழந்தை பராமரிப்பு மையங்களில் முறையான செயல்முறையைத் தங்கள் தரபு செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய ஃபோங் கூய் லூனின் கேள்விக்கு நான்சி சுக்ரி இவ்வாறு பதிலளித்தார். 

குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் சமூக நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்படுவதை பெற்றோர்கள் உறுதி செய்வது முக்கியம்.

குழந்தை துன்புறூத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால்
தங்கள் தரப்பு கூடுதல் நடவடிக்கைகளைக் கையாளுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

உதாரணமாக, அனைத்துக்ழந்தை பராமரிப்பு மையங்களும் வளாகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க கேமராக்கள் நிறுவப்படும். 

தங்கள் பணியாளர்கள் குழந்தை பராமரிப்புப் பணியாளர்களாக ஆவதற்குத் தகுதியானவர்கள் என்பதை பராமரிப்பு மையங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அனைத்து அரசு குழந்தை பராமரிப்பு மைய ஊழியர்களும் சைக்கோமெட்ரிக் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset