நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3,014 கிளைத் தலைவர்கள் ஆதரவுடன் மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு

கோலாலம்பூர்:

மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு பெற்றார்.

இதனை தேர்தல் குழுத் தலைவர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் அறிவித்தார்.

2024 - 2027ஆம் ஆண்டுக்கான மஇகாவின் தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.

கட்சியின் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவு 

ஆகையால் மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

கிட்டத்தட்ட 3,014 கிளைத் தலைவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு முழு ஆதரவை வழங்கி அவரைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

ஆகவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவை வழிநடத்துவார்.

துன் சாமிவேலுக்கு பின் மூன்றாவது முறையாக கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு பெற்ற தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளங்குகிறார்.

அவர் கட்சியை இன்னும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset