நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறையில் அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் அன்வார் தயக்கம் கொண்டாரா ? பி.எஸ்.எம் கட்சி கேள்வி 

கோலாலம்பூர்: 

கேகே மார்ட்டில் விற்கப்பட்ட காலுறையில் அல்லாஹ் வார்த்தை இருந்ததை அடுத்து நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தில் மற்ற தலைவர்களைப் போல அன்வாரும் தயக்கம் கொண்டாரா என்று பி.எஸ்.எம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் தயாராக இல்லையோ என்று பி.எஸ்.எம். கட்சி எண்ணுவதாக அக்கட்சியின் துணைத்தலைவர் எஸ். அருட்செல்வன் கூறினார். 

அல்லாஹ் விவகாரத்தில் மடானி அரசாங்கம் நிலையான மற்றும் தீர்க்கமான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இன்று மலாய்க்காரர்களின் தாய் கட்சியாக விளங்கும் அம்னோ இன மோதலுக்கு வித்திடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்று அவர் சாடினார். 

குறிப்பாக அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார். 

நாட்டின் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து மேம்படுத்த பிரதமர் என்ற முறையில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரலையில் நாட்டு மக்கள் முன் உரையாற்ற வேண்டும். இதனை அவர் செய்ய வேண்டும் என்று பி.எஸ்.எம் கட்சி வலியுறுத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset