நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்மாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது

மலாக்கா:

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கொலை மிரட்டல் கொடுத்ததாக நம்பப்படும் முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை மத்திய மலாக்கா போலீஸ் தலைவர் கிறிஸ்டபர் பாதிட் கூறினார்.

ஓய்வு பெற்ற 62 வயது முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 68 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

68 வயதான முதியவர் பட்டறை ஒன்றின் உரிமையாளராவார்.

கேகே மார்ட் விவகாரத்தில் அக்மால் நடவடிக்கைகளில் திருப்தியடையாத அம்முதியவர் இவ்வாறு செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset