நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்களை தவறாக தாக்கிய குற்றத்தை  மறுவாழ்வு மையத்தின் மேற்பார்வையாளர், உதவியாளர் ஒப்புக்கொண்டனர்

சிரம்பான்: 

தனியார் போதை மறுவாழ்வு மையத்தின் மேற்பார்வையாளர், உதவியாளர்   பயிற்சி பெற்ற ஆண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

எம். ஜேசன் ஜெய் கணேஷ், கெல்வின் ரேமண்ட் ஆகியோர் நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிசி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அதை ஒப்புக் கொண்டனர்.

கடந்த மார்ச் 19ஆம் தேதி காலை 11 மணியளவில் நீலாய், லெங்கெங்கில் உள்ள மையத்தின் நிர்வாக அலுவலகத்தில் பிவிசி குழாயைப் பயன்படுத்தி 38 வயதான ஆடவரை வேண்டுமென்றே கடுமையான தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம், சவுக்கடி ஆகியவற்றை வழங்கப்படும்.

அரசுத் தரப்பு வழக்கறிஞராக நூர் ஷாபினா முகமட் ரட்சுவான் ஆஜரானார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் சார்பில் வழக்கறிஞர் பேட்ரிக் சாமுவேல் செபாஸ்டியன் ஆஜரானார்.

மிருகத்தனமாக ஆடவரை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து எனது வாடிக்கையாளர் ஒரு மனநல பரிசோதனையைப் பெற அனுமதி கோரினார்.

மேலும் இந்த வழக்கைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க ஒரு ஆர்டரைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை பேட்ரிக் சாமுவேல் கேட்டுக் கொண்டார்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் மனநல பிரச்சினைகள் முந்தைய விசாரணையின் போது ஒருபோதும் எழுப்பப்படவில்லை என்று ஹாபினா கூறினார்.

பேட்ரிக்கின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

மேலும் இருவருக்கும் ஜாமின் வழங்காத நீதிபதி, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதி தொடரும் என்று கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset